ஐஸ்கிரீம் வாங்கி தருவதாக கூறி குழந்தையை கடத்திய தம்பதி : போலீசாரிடம் சிக்கினர்!

30 September 2020, 4:29 pm
Child Kidnap - updatenews360
Quick Share

கன்னியாகுமரி : பெங்களூரில் இருந்து கடத்தப்பட குழந்தைகளை களியக்காவிளை போலீசார் மீட்டனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் காட்டாகடை பகுதியை சேர்ந்த ஜோசப் ஜான் என்பவர் தனது மனைவியுடன் இரண்டு குழந்தைகளோடு களியக்காவிளை பேருந்து நிலையத்தில் இருந்து தமிழக கேரள எல்லை சோதனை சாவடியை தாண்டி செல்ல முயன்ற நேரத்தில் அவருடன் வந்த பெண் குழந்தை தொடர்ந்து அழுவதை பார்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவருடன் வந்த இரண்டரை வயது பெண் குழந்தை லோகிதாவை கடத்தி வந்தது தெரியவந்தது. தொடர்ந்து அந்த தம்பதியினர், தங்களதுதான் குழந்தை தெரிவிக்கவே அவருடன் வந்த ஆறு வயது சிறுவனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது கடந்த 25 தினங்களுக்கு முன்பு பெங்களூர் மெஜஸ்டிக் பகுதியில் இருந்து பிச்சை எடுத்து கொண்டிருந்ததாகவும், குழந்தைகளுக்கு குளிர்பானங்கள் வாங்கி கொடுத்ததோடு குழந்தைக்கு ஐஸ் கிரீம் வாங்கி கொடுத்து அந்த குழந்தையை கடத்தி வந்ததாக அந்த சிறுவன் தெரிவித்தான்.

இதைத்தொடர்ந்து தம்பதியரை களியக்காவிளை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர் குழந்தைகளை நாகர்கோவில் காப்பகத்தில் சேர்த்த போலீசார், அந்த சிறுவனை அவர்களது குழந்தை என்று அந்த தம்பதி தெரிவித்து வருகின்றனர்.

அந்த குழந்தை அவர்களது குழந்தையா அந்த குழந்தையும் கடத்தல் குழந்தையா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் பல கடத்தல் கும்பலுடன் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காணாமல் போன குழந்தையின் தாய், குழந்தையை கண்டுபிடித்து தருமாறு கண்ணீர் மல்க கோரிக்கைவிடுத்துள்ளார். தற்போது குழந்தை மீட்கப்பட்டுள்ளதால் பெங்களூவில் குழந்தையை ஒப்படைக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 10

0

0