முகக்கவசம் அணிந்தால் போதுமா? வங்கியில் காற்று வந்து போக இடமில்லாத அளவு கூட்டம்.!!
4 August 2020, 12:42 pmகன்னியாகுமரி : தக்கலை அரசு வங்கியில் மக்கள் கும்பலாக திரண்டதால் சமூக இடைவெளி விதிமுறை காற்றில் பறந்தது.
மாதத்தின் முதல் வாரம் என்பதால் பணம் செலுத்துதல், பெறுதல் உள்ளிட்ட அவசர தேவைகளுக்காக பொதுமக்கள் கூட்டம் அரசு வங்கிகளில் அதிகளவில் காணப்படுகிறது. கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கையாக வங்கிகளுக்குள் கும்பலாக அனுமதிக்காமல் ஒவ்வொருவராக அனுமதிக்கின்றனர்.
இதனால் வங்கிகள் முன்பு கும்பலாக நீண்ட நேரம் காத்து நிற்கின்றனர். முகக்கவசம் அணிந்தால் போதும் என்ற மன நிலையில் வருபவர்கள் சமூக இடைவெளியினை கடைபிடிப்பதில்லை. வங்கியில் முன்பு சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அடையாளமும் ஏற்படுத்தவில்லை. இதனால் அனைவரும் இடைவெளியின்றி நெருங்கி நிற்கின்றனர்.
இதன் மூலம் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அரசின் சமூக இடைவெளி விதிமுறை காற்றில் பறந்த நிலையாகவே உள்ளது. இனியாவது சமூக இடைவெளியினை கடைபிடிக்க வாடிக்கையாளர் களும் முன் வர வேண்டும் எனவும் வங்கி நிர்வாகமும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.