பாஜகவில் இணையும் கலைஞரின் பேரன்..? ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக..!

5 November 2020, 9:09 pm
Azhagiri_Dhayanidhi_UpdateNews360
Quick Share

திமுகவில் தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டு வருவதால் அதிருப்தியடைந்த கலைஞரின் பேரன் விரைவில் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

திமுகவின் தென்மண்டல கட்டமைப்புகளை நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியால் மதுரைக்கு அனுப்பப்பட்டு தென் மண்டல அமைப்புச் செயலாளராக பதவி வகித்தவர் அவரது மகன் மு.க.அழகிரி. 

பின்னர் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, மத்திய அரசில் உர அமைச்சராகவும் வலம் வந்துள்ளார். தென் மண்டல திமுக முழுவதையும் தன்னுடைய முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த மு.க.அழகிரி பின்னர் திமுகவின் தலைமையை கைப்பற்ற திரைமறைவு வேளைகளில் ஈடுபட்டதாக பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் அவர் தனது தந்தை கருணாநிதியால் திமுகவிலிருந்து முழுவதுமாக தூக்கியெறியப்பட்டார். அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டாலும் தற்போதும், அவர் மதுரை மண்ணின் மைந்தராக தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

இதற்கிடையே, மீண்டும் திமுகவில் இணைந்து விட எத்தனையோ வழிகளில் அழகிரி முயன்றும் ஸ்டாலின் குடும்பம் பிடி கொடுக்காததால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. ஒரு கட்டத்தில் தனக்கு எதுவும் வேண்டாம் என்றும், தன்னுடைய மகனுக்கு கட்சியின் ஒரு பொறுப்பு கொடுத்து இணைத்துக் கொள்ளுங்கள் என்றும் கூட கேட்டதாக கூறப்படுகிறது.

ஸ்டாலினும் இதற்கு ஏற்ப, கலைஞர் குடும்ப உறுப்பினர் ஒருவர் பாஜக போன்ற மாற்றுக் கட்சியில் இணைந்தால் தனக்கு அவப்பெயர் ஏற்படும் எனக் கருதி தயாநிதி அழகிரியை மீண்டும் இணைத்துக் கொள்ள தயாராக இருப்பதாக செய்திகள் அடிபட்டது.

ஆனால் சமீபத்தில் கொடைக்கானலுக்கு ஓய்வெடுக்கச் சென்ற அழகிரியை அங்கு வைத்து பாஜக தலைவர் ஒருவர் ரகசியமாக சந்தித்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது அழகிரி மகன் தயாநிதிக்கு பாஜகவில் ஒரு பொறுப்பு வழங்கப்பட்டு அவரை கட்சியில் இணைத்துக் கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்த பேச்சுவார்த்தை தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் விரைவில் கலைஞர் குடும்ப வாரிசு பாஜகவில் ஐக்கியம் எனும் செய்தி வெளியாகும் என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

Views: - 51

0

0