கோவை உக்கடம் குளத்தில் கேரள நபரின் சடலம் : போலீசார் விசாரணை…

25 November 2020, 11:42 am
Ukkadam Dead Body - Updatenews360
Quick Share

கோவை : உக்கடம் பெரியகுளத்தில் இருந்து கேரளாவைச் சேர்ந்த நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கோவை உக்கடம் பெரியகுளம் பகுதியில் சடலம் ஒன்று மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் அங்கு இருந்த மீனவர்களின் உதவியுடன் நீரில் கிடந்த சடலத்தை மீட்டனர்.

மேலும் அவரது அடையாள அட்டையை சோதித்த போது அவர் கேரளாவைச் சேர்ந்த கேசவன் (வயது 47) என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 0

0

0