கிசான் திட்ட முறைகேடு : ரூ.17.40 லட்சம் பறிமுதல்..!

9 September 2020, 4:54 pm
Quick Share

கிசான் திட்ட முறைகேடு விவகாரத்தில் திருவாரூர் மாவட்டத்தில் ரூ.17.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தில் தமிழகத்தில் பல நூறு கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. இது தொடர்பாக 9 மாவட்டங்களில் தலா ஆயிரம் பேர் வீதம் 9 ஆயிரம் பேர் மீது சிபிசிஐடி போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வருவாய்துறை, வேளாண் துறை அதிகாரிகள் கூட்டுச் சேர்ந்து இந்த முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் மோசடி செய்த பணத்தை மீட்கும் முயற்சியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த சூழலில், திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 2,383 பயனாளிகள் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காமல் பயனடைந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து ரூ.17.40 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. மட்டும் இன்றி இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Views: - 7

0

0