பட்டப்பகலில் வீட்டின் வெளியே நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனம் திருட்டு : சிசிடிவி காட்சியை வைத்து விசாரணை.!!
14 August 2020, 12:38 pmகிருஷ்ணகிரி : ஊத்தங்கரை அருகே பட்டப்பகலில் இரு சக்கர வாகனம் திருடிய சம்பவம் குறித்து சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 22). இவர், தகரப்பட்டி கிராமத்தில் உள்ள பால் கொள்முதல் நிலையத்தில், தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்றிருந்தார்.
சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் காணாமல் போயிருந்தது. இதையடுத்து, அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது, இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ஊத்தங்கரை காவல் நிலையத்தில் தட்சிணாமூர்த்தி புகார் அளித்தார். போலீசார், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்ற இளைஞரை தேடி வருகின்றனர்.