சரக்கு கப்பல் மோதி உயிரிழந்த குமரி மீனவர்கள் : குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த பொன்.ராதாகிருஷ்ணன்!!

15 April 2021, 7:51 pm
Pon RAdhakishnan Tribute -Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : சரக்கு கப்பல் மோதி உயிரிழந்த தமிழக மீனவர்கள் குடும்பத்திற்கு குமரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் இருந்து மீன் பிடிக்க படகில் சென்ற மீனவர்களின் படகு கர்நாடக மாநிலத்திற்கு உட்பட்ட பகுதியில் மீன் பிடித்த போது சிங்கப்பூர் சரக்கு கப்பல் மோதி 2 கமரி மீனவர்கள் உயிரிழந்தனர்.

இதையடுத்து தேடப்பட்டு வந்த மீனவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு இன்று உடல்கள் சொந்த ஊரான குளச்சலுக்கு கொண்டு வரப்பட்டன. இதையடுத்து இருவரின் உடல்களுக்கு குடும்பத்தினர், உறவினர்கள், கிராம மக்கள், அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், உயிரிழந்த மீனவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்றுஆறுதல் தெரிவித்தார். உடன் குளச்சல் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் குமரி.ப.ரமேஷ் அவர்களும், குளச்சல் நகர தலைவர் கணேசன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்

Views: - 20

0

0