இலங்கை தாதா உயிரிழந்த விவகாரம் : 2 வழக்குகள் பதிவு! சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர் தகவல்.!!

4 August 2020, 2:03 pm
Lanka Dada IG Byte- Updatenews360
Quick Share

கோவை : இலங்கையை சேர்ந்த அங்கோடா லக்கா மரணம் தொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என ஐ.ஜி சங்கர் தெரிவித்துள்ளார்.

இலங்கையை சேர்ந்த போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் அங்கொட லொக்கா உயிரிழந்த விவகாரத்தில் இலங்கையைச் சேர்ந்த பெண் உட்பட 3 பேரை கோவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இங்த நிலையில் அங்கொட லொக்கா உயிரிழந்த விவகாரத்தில் மொத்தம் 7 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் சிபிசிஐடி ஐ.ஜி சங்கர் தெரிவித்துள்ளார். அங்கோடா லக்கா மரணம் தொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என கூறிய அவர், வழக்கு குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மரணத்திற்கான காரணம் மற்றும் ஆவணங்கள் மோசடி குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மூன்று பேரை போலீஸில் காவலில் எடுத்து விசாரணை செய்யும் போது கூடுதல் தகவல் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறிய அவர், தற்போது முதல் கட்ட விசாரணை துவங்கி உள்ளதாக கூறினார்.

Views: - 0 View

0

0