வனத்துறைக்கு சிக்கலை ஏற்படுத்தும் சிறுத்தை : இரவு நேரத்தில் தோட்டத்தில் உலா வரும் காட்சிகள் வைரல்!!

Author: Udayachandran RadhaKrishnan
20 September 2021, 5:42 pm
Leopard -Updatenews360
Quick Share

ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே சிறுத்தை நடமாட்டம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதால் பொதுமக்கள அச்சத்தில் உறைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனச்சரகத்திக்கு உட்பட்ட சூசைபுரம், தொட்டகாஜனூர், பீம்ராஜ்நகர் பகுதியில் கடந்த 2 மாதங்களாக சிறுத்தை தாக்கி ஆடு, மாடு, காவல் நாய்களையும் சிறுத்தை தாக்கி கொன்றது.

இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். ஆடு மற்றும் நாய்களை வேட்டையாடிய சிறுத்தை அங்கு உள்ள கல்குவாரியில் சென்று பதுங்கி கொள்வதும் வாடிக்கையாகி விட்டது. வனத்துறையினர் கூண்டு வைத்தும், சிறுத்தை கூண்டில் சிக்காமல் போக்கு காட்டி வருகிறது.
தொடர்ந்து இப்பகுதியில் கால்நடைகளை வேட்டையாடி வருவதாலும் சிறுத்தை கல்குவாரியில் பதுங்கிகொள்வதால் சிறுத்தையை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு 7.30 மணியளவில், தொட்டகாஜனூர் கிராமத்தில் உள்ள ரமேஷ் என்பவரது தோட்டத்தில் வைத்து இருந்த கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை நடந்து செல்லும் வீடியோ காட்சி பதிவானது.

தோட்டத்திற்கு வந்த சிறுத்தை நாய்கள் சத்தம் கேட்டு மீண்டும் திரும்பி ஓடும் காட்சிகள் பதிவாகி உள்ளது. மேலும் அங்கிருந்து வெளியே வந்த சிறுத்தை முருகேஷ் என்பவரது தோட்டம் வழியாக நடந்து செல்லும் காட்சிகளும் கேமராவில் பதிவாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

Views: - 119

0

0