“சிறுவண்டு சிக்கும், சிறுத்தை சிக்காது லே“ : வனத்துறை வைத்த கூண்டில் சிக்காமல் போக்கு காட்டும் சிறுத்தை!!

7 July 2021, 11:21 am
Leopard - Updatenews360
Quick Share

தேனி : கடந்த 10 நாட்களாகளுக்கும் மேலாக தேனி வனத்துறை ஏமாற்றி வரும் சிருத்தை கூண்டில் ஆட்டை வைத்து பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள கைலாசநாதர் கோவிலின் மலையைச் சுற்றி கிரிவலப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

கிரிவலப்பாதையில் பொதுமக்கள் மாலை நேரங்களில் கிரிவலம் செல்வது வழக்கம். இந்நிலையில் 23ஆம் தேதி மாலை கிரிவலப் பாதைக்கு மேல் உள்ள மலைப்பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் பார்த்துள்ளனர்.

அதனை அடுத்து பெரியகுளம் காவல்துறைக்கு தகவல் கொடுத்த நிலையில் தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் பெரியகுளம் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் மற்றும் பெரியகுளம் தென்கரை பேரூராட்சி நிர்வாகம் சேர்ந்து கைலாசநாதர் கோவிலின் கிரிவலபாதை பகுதிக்கு பொதுமக்கள் மாலை நேரங்களில் செல்ல வேண்டாம் அறிவுறுத்தினர்.

இதனை தொடர்ந்து தேனி வனச்சரக அதிகாரி சாந்தக்குமார் சிறுத்தை நடமாட்டம் உள்ள மலைப்பகுதியில் 3 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி சிறுத்தை நடமட்டத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்ட இந்நிலையில் சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதை உறுதி செய்யப்பட்டது.

சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் கடந்த சிறுத்தையை பிடிக்க ஆட்டுக்குட்டி கட்டிவைக்கப்பட்ட கடந்த மாதம் 27ஆம் தேதி 2 கூண்டு வைக்கப்பட்டது. கூண்டு வைக்கப்பட்டு 10 நாட்கள் ஆன நிலையில் இன்றுவரை சிறுத்தையை பிடிக்க வைக்கப்பட்ட 2 கூண்டுகளிலும் சிறுத்தை சிக்காத நிலையில் வனத்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சினிமாவில் வரும் வசனத்தை போல சிருவண்டு சிக்கும், சிறுத்தை சிக்காது லே என்ற பாணியில் வனத்துறை ஏமாற்றி வரும் சிறுத்தையை பிடிக்கும் வரை கைலாசர்நாதர் கோவில் கிரிவலப்பாதையில் பகதர்கள், பொதுமக்கள் குழந்தைகளுடன் தனியா செல்லவேண்டாம் என வனத்துறையினர் அறுவுறுத்தி வருகின்றனர்.

Views: - 206

0

0