‘நாதியற்று… இந்நாளும் கழக விசுவாசி’: அமைச்சருக்கு வந்த ஆம்புலன்ஸ் கடிதத்தால் திமுகவினர் கலக்கம்..!!

Author: Aarthi Sivakumar
24 December 2021, 5:14 pm
Quick Share

ஈரோடு: திமுக விசுவாசி ஒருவர் அமைச்சருக்கு எழுதிய கடிதம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் பிரபல ஓவியராக இருப்பவர் வள்ளி நாராயணன். திமுக விசுவாசியான இவர் பழுதடைந்து கிடக்கும் அமரர் ஊர்தியை சரிசெய்து தருமாறு தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் க.முத்துசாமிக்கு எழுதிய கடிதம் ஒன்று தற்போது பேசுபொருளாகியுள்ளது.

அந்த கடிதத்தில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தால்தான் வரும் தேர்தல் காலங்களில் பொதுமக்களிடம் தயக்கமின்றி வாக்கு சேகரிக்க மரியாதையாக இருக்கும். கழக நிர்வாகிகள் சட்டை பாக்கெட்டில் படத்தை வைத்துக் கொள்வதாலும், ஃப்ளக்ஸ் பேனர் வைப்பதாலும் மட்டும் நாம் மக்களிடம் இருந்து வாக்குகளை பெற முடியாது என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதில், ஹைலைட் என்னவென்றால், ‘நாதியற்ற முன்னாள் கழகத்தவன், இந்நாளும் கழக விசுவாசி’ என்று நச்சென்று குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதத்தை அமைச்சரின் வீட்டுக்கே நேரில் சென்று கொடுக்கப்போனபோது அமைச்சர் வீட்டில் இல்லாததால், அவரது பி.ஏவிடம் கொடுத்துவிட்டு வந்துள்ளாராம்.

திமுக விசுவாசியே அமைச்சருக்கு மக்களுக்கு தேவையானதை செய்து கொடுத்தால் தான் வாக்கு பெற முடியும் என கடிதம் எழுதியதாக பிரபல வார நாளிதழ் வெளியான செய்தி சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

Views: - 408

0

0