வரும் சட்டமன்ற தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிடுவதே நிலைப்பாடு : கருணாஸ் எம்.எல்.ஏ ‘கறார்‘!!

24 September 2020, 1:44 pm
Karunas MLA - updatenews360
Quick Share

மதுரை : வரும் சட்டமன்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் எம்எல்ஏ விருப்பம் தெரிவித்துள்ளார்.

தென்மாவட்டங்களில் இரு பிரிவினரிடைய மோதல் ஏற்படும் வகையில் சுவரொட்டிகளை ஒட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரும் எம்.எல்.ஏவுமான நடிகர் கருணாஸ் தென்மண்டல காவல்துறை தலைவரிடம் புகார் அளித்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ் : விளம்பர நோக்கத்தில் இரு தரப்பினரிடையே பிரச்சனைகளை உருவாக்கும் வகையில் சுவரொட்டிகளை ஒட்டுபவர்கள் மீதும், அச்சகங்கள் மீதும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

வரும் தேர்தலில் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முக்குலத்தோர் புலிப்படை உதவியாக இருக்கும், வரும் தேர்தலில் கூட்டணி அமைக்கும் கட்சியிடம் 2 தொகுதிகள் கேட்கப்படும் என்றார். அதிமுகவில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக பல தரப்பு கருத்துகள் பிரதிபலிக்கப்படுகிறது,

காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்தை தொடங்கிவைத்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துகொள்கிறேன் எனவும், ரஜினி ரசிகர்கள் பிறந்ததில் இருந்து போஸ்டர் ஒட்டிவருகிறார்கள் , அவர் அரசியலுக்கு வந்தால் தான் சொல்லமுடியும், தமிழகத்தில் மட்டும் தான் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்கலாம் என்ற நிலையில் எந்த கட்சிக்கும் கொடிபிடிக்க ஒரு கூட்டம் உள்ளது என்றார்.