அங்கன்வாடி மதிய உணவில் பல்லி : 17 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம்.. கடலூரில் பரபரப்பு!!!

Author: Udayachandran RadhaKrishnan
20 September 2021, 6:25 pm
Lizard Food - Updatenews360
Quick Share

கடலூர் : அங்கன்வாடியில் சத்துணவு சாப்பிட்ட 17 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் உடனே அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கடலூர் மாவட்டம் திருச்சோபுரம் ஊராட்சி பூதங்கட்டி கிராமத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 17 குழந்தைகள் பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் ஊரடங்குக்கு பிறகு கடந்த 1-ந் தேதி முதல் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக இன்று மதியம் 17 குழந்தைகளும் அங்கன்வாடி மையத்திற்கு சென்று மதிய உணவை சாப்பிட்டனர்.

இதற்கிடையே உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் இரண்டு குழந்தைகள் வாந்தி எடுத்துள்ளனர். இதற்கிடையே உணவு பரிமாறிய ஊழியர்கள் சாப்பாட்டை பார்த்தபோது அதில் பல்லி விழுந்திருந்தது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கன்வாடி மைய ஊழியர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் 17 குழந்தைகளையும் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, தாசில்தார் பலராமன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் திருமார்பன், ஒன்றிய துணைச் செயலாளர் கமல் ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்து வந்து குழந்தைகளை பார்வையிட்டு, அவர்களது பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

Views: - 232

0

0