மிளகாய் பொடி தூவி மாமனாரை வெட்டிக் கொல்ல முயன்ற மருமகன்: மனைவியை புகுந்த வீட்டிற்கு அனுப்பாததால் வெறிச்செயல்!!

Author: Udayaraman
2 August 2021, 9:35 pm
Quick Share

மதுரை: மதுரையில் மாமனாரை நடுரோட்டில் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டி படுகொலை செய்ய முயன்ற மருமகன் சமூகவலைதளங்களில் காட்சிகள் குறித்து தெப்பக்குளம் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த ராஜபாண்டி என்பவர் தனது மகளை தனது தங்கை மகனான அனுப்பானடி வடக்கு தெருவை சேர்ந்த முத்துமணிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடித்து வைத்துள்ளார். இந்நிலையில் கணவன் – மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனிடையே தனது மனைவியை தன்னுடன் சேர்த்து வாழ வைக்கும் படி பலமுறை மாமனாரிடம் முத்துமணி கேட்டுள்ளார். தனது மகள் உன்னுடன் வாழ விரும்பவில்லை. அதனால் தொந்தரவு செய்யாதே என எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது.

அதோடு அரசு வேலைக்கு தேர்வாகியுள்ள நிலையில் வேறு மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து வைப்பதற்கா தன்னுடன் சேர்ந்து வாழவைக்க விடவில்லை என்ற ஆத்திரத்தில் மருமகன் சென்றுள்ளார். இந்நிலையில் ராஜபாண்டி மதுரை காமராஜர் சாலை சந்திப்பு பகுதியான பிக்சர் சாலை பகுதியில் வேலைக்கு வந்த போது மருமகன் முத்துமணி வழிமறித்து தகராறு செய்துள்ளார். சிறிது நேரத்தில் தான் வைத்து இருந்த மிளகாய் பொடியை கண்ணில் தூவி அரிவாளால் வெட்டி விட்டு தப்பினார்.இந்த நிலையில் காயம்பட்ட ராஜபாண்டியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

நடுரோட்டில் மருமகன் ஆத்திரத்தில் மாமனாரை வெட்டிய காட்சிகள் அங்கு வாகனங்களில் செல்வோர் செல்போனில் படம் பிடித்தனர். அதோடு அங்கு வைக்கப் பட்டிருந்த சிசிடிவி கேமராவிலும் பதிவாகி இருந்தது அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.வெட்டி விட்டு தப்பி ஓடிய முத்துமணியே போலீசார் ஒருவர் விரட்டி பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.ஆட்கள் நடமாட்டம் மிகுந்த காமராஜர் சாலை பகுதியில் பட்டப்பகலில் நடுரோட்டில் வெட்டிய மருமகனால் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 248

0

0