‘நான் சொன்னத ஏன் செய்யல‘? விரக்தியில் அரை நிர்வாண கோலத்தில் முன்னாள் கவுன்சிலர் செய்த செயல்!!

8 September 2020, 2:16 pm
Quick Share

மதுரை : வாடிப்பட்டியில் தண்ணீர் தொட்டி மீது ஏறி 1 மணி நேரமாக அரை நிர்வாண கோலத்தில் நின்று முன்னாள் கவுன்சிலர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள போடிநாயக்கன்பட்டியில் பொது மயானத்தில் உடலை வெட்டியான் சரியாகவும் முறையாகவும் உடலை எரிக்கவில்லை என கூறி அப்பகுதியை சேர்ந்த 9வது வார்டு முன்னாள் கவுன்சிலர் துரைப்பாண்டி என்பவர் பேரூராட்சியிடம் புகார் தெரிவித்துள்ளார்

வாடிப்பட்டி பேருராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் கோபம் அடைந்த துரைப்பாண்டி அப்பகுதியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி மீது அமர்ந்தும் பின்னர் அரை நிர்வாணமாக கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டல் விடுத்தார்

உடனடியாக அப்பகுதியில் பொதுமக்கள் கூட்டமாக கூடியதால் பரபரப்பானது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வாடிப்பட்டி தீயணைப்பு துறையினர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி மயானத்தில் முறையாக இறந்தவர்களின் உடலை எரியூட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டிய ஏறி துரைப்பாண்டியை பத்திரமாக மீட்டனர்

இதனால் சுமார் 1 மணி நேர தற்கொலை போராட்டம் செய்தவர் கீழே இறங்கினார். இதுபோன்ற செயலை இனி செய்யக்கூடாது என கூறிய போலீசார் முன்னாள் கவுன்சிலரை எச்சரிக்கை செய்து அனுப்பினர்.

Views: - 7

0

0