இந்திய சிலைகளை திருடி வெளிநாடுகளில் விற்பனை : சுபாஷ் சந்திர கபூரின் ஜாமீன் மனு தள்ளுபடி..!

Author: Babu
12 October 2020, 8:15 pm
HC Madurai 01 updatenews360
Quick Share

இந்தியாவின் சிலைகளை திருடி வெளிநாடுகளில் விற்பனை செய்யும் சுபாஷ் சந்திர கபூரின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மீண்டும் தள்ளுபடி செய்துள்ளது.

இந்தியாவில் இருக்கும் பழமை வாய்ந்த ஐம்பொன் சிலைகளை சட்டத்துக்கு புறம்பாக திருடிச் சென்று, அமெரிக்காவில் விற்பனை செய்து வந்தவர் சுபாஷ் சந்திர கபூர். இங்கிருந்து திருடிச் செல்லும் சிலைகள் நியூயார்க்கில் விற்பனை செய்யப்படுவதை அறிந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர், இந்தியாவிடம் சிலைகளை மீண்டும் ஒப்படைக்குமாறு தகவல் அனுப்பியதன் பேரில், சுபாஷ் சந்திர கபூர் சிலைகளை கடத்திச் சென்று விற்பனை செய்தது அம்பலமானது.

இதனையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுத்த போலீசார், கடந்த 2011 ஆம் ஆண்டு அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் சுபாஷ் சந்திர கபூர், தனது உடல்நலத்தை காரணம் காட்டி ஜாமீன் கேட்டு மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார். மதுரை உயர்நீதிமன்ற கிளை ஏற்கனவே அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில் மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு சுபாஷ் கபூர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நீதிபதி இளந்திரையன் முன்பு நடைபெற்றது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன் இன்டர்போல் உதவியுடன் ஜெர்மன் போலீசால் சுபாஷ் கபூர் கைது செய்யப்பட்டதாகவும், அவர் இந்தியா கொண்டு வரும்போது ஜெர்மன் அரசுக்கு இந்தியா ஒரு உத்தரவாதத்தை அளித்ததாகவும், அதில் இந்தியாவில் சிறை காலம் முடிந்தவுடன் அவரை மீண்டும் ஜெர்மன் போலீசில் ஒப்படைப்பதாக தெரிவிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டினார். இதையடுத்து நீதிபதி சுபாஷ் சந்திர கபூர் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்..

Views: - 48

0

0