பட்டப்பகலில் வாலிபரை வெட்டி தலையை துண்டித்த கும்பல் : அதிர்ச்சியளித்த மதுரை சம்பவம்!!

16 November 2020, 9:46 am
madurai - murder -1 updatenews360
Quick Share

மதுரையில் நேற்று பட்டப்பகலில் தேவாலயம் முன்பாக நடந்து சென்ற இளைஞரை வெட்டி படுகொலை செய்து தலையை துண்டித்து வாசலில் வீசி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

மதுரை கீழவாசல், செயின்ட் மேரீஸ் சர்ச் அருகே பிரதான சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த கீழ்மதுரையை முருகானந்தம், முனியசாமி ஆகிய இருவரையும் காரில் வந்தவர்கள் திடிரென வழிமறித்து மறைத்தனர். அப்போது, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினார். இதில், முருகானந்தத்தின் தலையை கொடூரமாக வெட்டி தலையை துண்டித்து எடுத்து சர்ச் வாசலில் வீசி சென்றனர். இதை தொடர்ந்து, அவ்வழியாக சென்ற பொதுமக்கள் ஒருவர் அவருடைய தொலைபேசியில் இந்த சம்பவத்தை பதிவு செய்துள்ளார்.

இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு மாநகர காவல் இணை ஆணையர் சிவபிரசாத் விசாரணை நடத்தினார். பின்னர், காவல்துறையினர் உடலை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மர்ம கும்பல் வெட்டியதில் படுகாயமடைந்த மற்றொரு நபரான முனியசாமி படுகாயங்களுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையே மதுரை பழங்காநத்தம் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் கார் ஒன்று நின்றிருந்தது. அதனை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று ஞாயிற்றுகிழமை என்பதால் சர்ச்சிற்கு கிறிஸ்துவர்கள் பிராத்தனைக்காக வரக்கூடிய நேரத்தில் பரபரப்பான சாலையில், இளைஞர்களை ஓட ஓட விரட்டி படுகொலை செய்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டும் இதே பகுதியில் இளைஞர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு தலை தனியாக கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், பழிக்கு பழி வாங்கும் சம்பவமாக இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் குறித்து கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 54

0

0

1 thought on “பட்டப்பகலில் வாலிபரை வெட்டி தலையை துண்டித்த கும்பல் : அதிர்ச்சியளித்த மதுரை சம்பவம்!!

Comments are closed.