வேறு ஒருவருடன் திருமண நிச்சயதார்த்தம் : காதலி வீட்டுக்கு கத்தியுடன் சென்ற காதலன் செய்த காரியம்!!

Author: Udayachandran RadhaKrishnan
20 August 2021, 1:43 pm
Youth Suicide Attempt 1 -Updatenews360
Quick Share

கோவை : தனது காதலிக்கு திருமணம் என்று தெரிந்ததும், காதலியின் வீட்டிற்க்கு இரவில் சென்ற காதலன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கோவை மாவட்டம் ஆவாரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர், 48 வயதான ஜீவா. இவரது கணவர் விஐயகுமார். கணவரின் தம்பி மகள், பீளமேட்டில் உள்ள தனியார், கல்லூரியில் படித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கல்லூரியில் பயின்று வந்த மாணவிக்கு, கேரளா மாநிலம் பழையனூர் பகுதியை சேர்ந்த அஜித் என்பவருடன், காதல் இருந்ததாக கூறப்படுகிறது, இந்த நிலையில், அஜித்தின் நடவடிக்கைகளை பிடிக்காத மாணவி, அவருடன் தனது காதலை முறித்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில், இன்று வீட்டில் வரண்பார்த்த, சரத்குமார் என்பவரை திருமணம் செய்து கொள்ள இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக கல்லூரி மாணவி, கடந்த 10 நாட்களாக ஜீவா வீட்டில் தங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில், சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படும் நேற்று இரவு, கல்லூரி மாணவியின் முன்னாள் காதலன் கத்தியுடன் ஜீவா வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். இதனை ஜீவா, தடுத்ததாக கூறபடுகின்றது.

இதையடுத்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, ஜீவாவின் கையில் கத்தியால் குத்தியதுடன், தனது அடிவயிற்றின் வலது பக்கத்திலும், கை மணிக்கட்டில் இடது பக்கத்திலும் குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

உடனடியாக இது குறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ஜீவா பந்தய சாலை காவல் நிலையத்தில் நேற்றிரவு புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 362

0

0