பட்டப்பகலில் வாலிபர் ஓட ஓட வெட்டிப் படுகொலை : பதற வைத்த “சிசிடிவி காட்சி“!!

24 September 2020, 11:13 am
Yotuh Murder - updatenews360
Quick Share

ராணிப்பேட்டை : பட்டப்பகலில் வாலிபர் ஓட ஓட மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் புதிய பேரூந்து நிலையத்தில் அரக்கோணம் கம்மவார் தெருவை சேர்ந்த கோகுல் (வயது 28) என்பவர் நான்கு பேர் கொண்ட மர்ம நபர்களால் தலை மற்றும் கையில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றதாக நகர காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் இறந்தவர் யார்? கொலை செய்தவர்கள் யார்? என விசாரணை மேற்க்கொண்டு வந்தனர். மேலும் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் பேருந்து நிலையம் அருகில் இருக்கக்கூடிய கடைகளின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் கொலை செய்த சிசிடிவி காட்சி கண்டறியப்பட்டு இவர்கள் யார் என்று போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.