பொங்கலுக்கு மாஸ்டர் கன்பார்ம்.. ஆனா டிக்கெட் விலை : திருப்பூர் சுப்பிரமணியம் கூறிய தகவல்!!

28 December 2020, 3:14 pm
Master Confirm-Updatenews360
Quick Share

திருப்பூர் : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13 ஆம் தேதியன்று மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் செய்யப்படும் என திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் இன்று திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் , பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13 ஆம் தேதியன்று மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் செய்யப்படும் என படக்குழுவினர் எங்களிடம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளதாக கூறினார்.

மேலும் , மாஸ்டர் படத்தை திரையரங்கில் மட்டுமே வெளியிடப்படும் என விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் காத்திருந்தனர். அவர்கள் நினைத்திருந்தால் ஓ.டி.டி யில் வெளியிட்டிருக்கலாம். அதை அவரகள் செய்யாமல் இருந்ததற்கு மன்ப்பூர்வமான நன்றி என்று கூறினார்.

ஜனவரி 1 முதல் 100% பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என ஏற்கனவே முதல்வரிடம் மனு அளித்துள்ளோம். 100% பாவையாளர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என மீண்டும் ஒருமுறை முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறோம் என்று கூறியவர் , அனைத்து ஓ.டி.டி தளங்களும் விஜய்யிடம் போட்டி போட்டு மாஸ்டர் படத்தை கேட்டனர். ஆனால் விஜய் தீர்க்கமான முடிவு எடுத்து திரையரங்கில் வெளியீடு செய்கிறார். அவரை போலவே அனைத்து நடிகர்களும் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறினார்.

அனைத்து மொழிகளிலும் பெரிய நடிகர்கள் முதல்வரை போய் சந்திக்கின்றனர். நடிகர் விஜய் முதல்வரை சந்தித்துள்ளது என்பது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. அனைத்து நடிகர்களும் ஒன்று சேர்ந்து சந்தித்து இருக்க வேண்டும். விஜய் , முதல்வரை சந்தித்தை வரவேற்கிறோம் என்றதுடன் , திரைப்படத்திற்கு ஒப்பந்தம் செய்யும் போதே , படம் திரையரங்கில் ரிலீஸ் ஆகி 8 வாரங்கள் கழித்து ஓ.டி.டி யில் வெளியிட வேண்டும் என நிபந்தனை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

மேலும் பொங்கலுக்கு புதிய படங்கள் ரிலீஸ் போது கட்டண குறைவுக்கு அரசுடன் பேசி முயற்சிப்போம். நிச்சயம் கட்டண உயர்வு இருக்காது என்றதுடன் , திரையரங்கை புறக்கணிக்கும் நடிகர்களின் படத்தை நாங்களும் புறக்கணித்தால் என்ன தவறு ? அது பற்றிய இறுதி முடிவை சங்கத்தின் மூலம் ஆலோசித்து சொல்வோம் என்றார்.

Views: - 1

0

0