நாளை முதல் மேட்டுப்பாளையம் – கோவை பயணிகள் ரயில் ரத்து : தேதியை அறிவித்தது ரயில்வே நிர்வாகம்!!

7 May 2021, 7:08 pm
Cbe - Mettupalayam- Updatenews360
Quick Share

மேட்டுப்பாளையம் – கோவை இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில் சேவை நாளை முதல் ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை படுவேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் ஒரு நாளில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தொடுகிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் மேட்டுப்பாளையம் – கோவை இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில் சேவை நாளை முதல் ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அதிகரித்துள்ளது.

ஏற்கனவே கொரோனா முதல் அலைக்கு பின், கடந்த மார்ச் மாதம் முதல் மேட்டுப்பாளையம் கோவை இடையேயான பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இரண்டாவது அலை தாக்கம் காரணமாக மீண்டும் ரயில் சேவை நாளை முதல் வருகிற 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Views: - 137

0

0