நிலுவை வணிக வரியை விரைந்து வசூல் செய்யுங்க : அதிகாரிகளுக்கு அமைச்சர் மூர்த்தி உத்தரவு

11 June 2021, 1:25 pm
minister moorthi- updatenews360
Quick Share

மதுரை : மதுரையில் நிலுவையில் உள்ள வணிக வரியை விரைந்து வசூல் செய்ய அதிகாரிகளுக்கு அமைச்சர் மூர்த்தி உத்தரவிட்டுள்ளனர்.

மதுரை தங்கராஜ் சாலையில் உள்ள வணிக வரித்துறை அலுவலகத்தில் வணிக வரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தீடீர் ஆய்வு, வணிக வரித்துறை அலுவலக செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தினார். அலுவலகம் தொடங்கும் நேரமான 10 மணிக்கு அலுவலக வளாகத்திற்கு வந்த அமைச்சர் ஒவ்வொரு தளங்களில் செயல்படும் அலுவலகங்கள் குறித்து ஆய்வு நடத்தினார்.

30 சதவீத ஊழியர்கள் பணிக்கு வரக்கூடிய சூழலில் மிக குறைந்த அளவிலான ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வந்துள்ள குறித்தும், ஏன் பணிக்கு அனைவரும் தாமதமாக தான் வருவார்களா..? என இணை ஆணையரிடம் அமைச்சர் கேள்வி எழுப்பினார்.

கால தாமதமாக அலுவலகத்திற்கு வந்தால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். மேலும், நிலுவையில் உள்ள வணிக வரியை வசூல் செய்ய வேண்டும் எனவும், போலி நிறுவனங்கள் வைத்து வணிக வரி உரிமம் எடுக்கப்பட்டு உள்ளதா என ஆய்வு நடத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Views: - 99

0

0

Leave a Reply