பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காமராஜர் விருது : அமைச்சர் சிவி சண்முகம் பாராட்டு!!

7 August 2020, 5:43 pm
CV Shanmugam Aprreciates- Updatenews360
Quick Share

விழுப்புரம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காமராஜர் விருதினையும், நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் சிவி சண்முகம் வழங்கினார்.

2018-2019-ம் கல்வியாண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு விருது மற்றும் ஊக்கத் தொகைக்கான காசோலை வழங்குதல், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளில் தமிழ் வழியில் பயின்று தேர்ச்சி பெற்ற சிறந்த மாணக்கர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்கி மேலும் கல்விச்செயல்பாடுகள் தனித்திறன்களில் சிறந்து விளங்கும் மாணவ மாணவிகளை 2018-2019-ம் கல்வியானண்டு முதல் தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு அவ்வாறு ஊக்குவிக்கும் திட்டம் தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பெருந்தலைவர் காமராஜர் விருது மற்றும் ஊக்கத்தொகைக்கான காசோலை வழங்கப்பட்டு வருகிறது.

2018-2019-ம் கல்வியாண்டில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் வழியில் பயின்று தேர்ச்சி பெற்ற கல்விச்செயல்பாடுகள் மற்றும் தனித்திறன்களில் சிறந்த மாணவ, மாணவிகளை மாவட்ட அளவில் தேர்ந்தெடுத்து அவர்களை பாராட்டி பெருந்தலைவர் காமராஜர் விருது மற்றும் காசோலைகள் (10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தலா ரூ.10,000/ மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தலா ரூ.20,000/-) மொத்தம் 18 மாணவ மாணவிகளுக்கு விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் சட்டம் நீதிமன்றங்கள் சிறைத்துறை மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை மாவட்ட எஸ்.பி ராதாகிருஷ்ணன், முத்தமிழ்ச் செல்வன் எம்எல்ஏ மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Views: - 47

0

0