“அந்த குரங்கு பொம்மை என்ன விலை“ : ஸ்டாலின் சொன்னதை ஸ்டாலினுக்கே திருப்பி அடித்த அமைச்சர் சி.வி சண்முகம்!!
23 November 2020, 5:41 pmவிழுப்புரம் : பாஜகவுடன், அதிமுக கூட்டணி வைப்பதில் திமுகவுக்கு ஏன் வலிக்கிறது என அமைச்சர் சிவி சண்முகம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக சட்டத்துறை அமைச்சர் CV.சண்முகம் தலைமையில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
அதன் பின்னர் தமிழக சட்டத்துறை அமைச்சர் CV.சண்முகம் செய்தியாளர்களிடம் பேசினார்.. அபோது அவர் பேசுகையில்: விழுப்புரம் மாவட்டத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொள்ளபட்டது. அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் உள்ளனர் என கூறினார்.
மேலும் அறிக்கை மன்னன் ஸ்டாலின் நேற்று அமித்ஷா பேச்சுக்கு ஒரு உவமை சொல்லி இருக்கிறார். “கண்ணாடி பார்த்து கரடி பொம்மை“, அவர் சொல்லியது அர்த்தம் அவருக்கே தெரியாது, முதலில் ஸ்டாலின் அவர் முகத்தை கண்ணாடியில் பார்க்கட்டும், உள்துறை அமைச்சர் சொல்லியது போல ஊழல் செய்பவர்களையும், குடும்ப அரசியல் செய்பவர்களை ஒழித்து கட்டுவோம்.
குடும்ப அரசியல் செய்வதே தப்பு என்று சொல்லும்போது அதிலும் பரம்பரை அரசியல் செய்வது தவறு, எம்ஜிஆர், அம்மா விற்கு பிறகு யாராவது அவரது குடும்பத்தினர் வழி நடத்தினார்களா? பாஜகவில் யார் குடும்ப அரசியல் செய்கிறார்கள்? யாரின் வாரிசு பாஜகவில் தலைவராக இருக்கிறார்கள்?
ஸ்டாலின் தன முதுகில் இருக்கும் அழுக்கை பார்க்க வேண்டும், பரம்பரை அரசியல் என்பது மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு , அதன் பிறகு இந்திரா காந்தி , ராஜீவ்காந்தி, அதன் பிறகு சோனியா அடுத்து ராகுல்காந்தி, இது தான் பரம்பரை அரசியல்.
60 ஆண்டுகாலம் ஆட்சி செய்து நாட்டை குட்டிசுவர் ஆக்கிய இயக்கம் காங்கிரஸ். அவர்களின் காலை பிடித்து கொண்டு அடிமை அரசியல் செய்த இன்னொரு பரம்பரை கட்சி என்றால் திமுக. முதலில் கருணாநிதி , மு.க. அழகிரி , அவரின் இன்னொரு மகன் மு.க. ஸ்டாலின், தலைவர், உதயநிதி ஸ்டாலின் அடுத்து கனிமொழி இப்படியே போகுது.
முதலில் ஸ்டாலின் கண்ணாடியை பாரு அதில் எல்லா மிருகமும் தெரியும், திமுக மத்திய அரசில் பங்கேற்ற போது என்ன கொண்டு வந்திர்கள்.. மோடி ஆட்சியில் 7 ஆண்டுகாலத்தில் மீனவர்கள் சுதந்திரமாக மீன் பிடித்து கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் (அதிமுக) பாஜக உடன் கூட்டனி வைத்திருப்பது ஏன் ஸ்டாலினுக்கு வலிக்கிறது? எங்களை பற்றி பேச திமுகவிற்கு எந்த அருகதையும் இல்லை என கடுமையாக விமர்சனம் செய்தார்.
0
0