அதிகாரத்தில் இருந்த போது கண்டுக்கல, எதிர்கட்சி தலைவரானதும் ஏமாற்றுகிறார் : அமைச்சர் விளாசல்!!

31 January 2021, 7:28 pm
dummy stalin - Updatenews360
Quick Share

தூத்துக்குடி : அதிகாரத்தில் இருந்த போது செய்ய வேண்டிய பணிகளை செய்யமால் எதிர்கட்சி தலைவராக இருந்து மு.க.ஸ்டாலின் மக்களை ஏமாற்றுகிறார் என அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ குற்றம்சாட்டியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஸ்ரீராம் நகரில் உள்ள நகர் நல மருத்துவமனையில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ கலந்து கொண்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமினை தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிகாரத்தில் இருந்த போது மக்களின் குறைகளை தீர்க்கமால் எங்கே போய் இருந்தார், அதிகாரத்தில் இருந்த போது செய்ய வேண்டிய பணிகளை செய்யாமல் எதிர்கட்சி தலைவராக இருந்து மக்களை ஏமாற்றுகிறார்.

தேர்தல் வந்தாலே ஏமாற்று வேலையில் கைதேர்ந்தவர்கள் திமுகவினர் என்றும்,மு.க.ஸ்டாலின் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த போது முன் மாதிரியாக கிராமசபை கூட்டம் நடத்தி மக்கள் பிரச்சினைகளை தீர்த்து இருந்தால் பாராட்டலாம் என்றும், கொரோனா பரவல் இருந்தாலும், அதையும் தடுத்து, வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு அதிமுக அரசு மக்களிடம் நல்ல பெயரை எடுத்துள்ளதாகவும், நாடாளுமன்ற தேர்தலின் போது திமுகவினர் கோடிக்கணக்கான மனுக்கள் வாங்கினர் அதனால் என்ன பயன், ஏதவாது ஒரு மனுவிற்கு தீர்வு கண்டு உள்ளனரா எனவும் கேள்வி எழுப்பினார்.

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினராக கனிமொழி வெற்றி பெற்று 2 ஆண்டுகள் ஆகிறது. அவர் எந்த பிரச்சினைக்கு தீர்வு கண்டுள்ளார் என்றும், கோவில்பட்டியில் ஜி.எஸ்டி பிரச்சினையினால் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்ட போது கனிமொழி எம்.பி.கண்டுகொள்ளவில்லை, அதிமுக அரசு தான் தீப்பெட்டி உற்பத்தியாளர்களை டெல்லிக்கு அழைத்து சென்று மத்தியரசுவுடன் பேசி 18 சதவீத ஜி.எஸ்.டி வரி 12 சதவீதமாக குறைக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்ய வேண்டிய பணிகளை கூட தமிழக அரசு மத்தியரசிடம் வலியுறுத்தி செய்கிறோம் என்றும், திமுக கூட்டணி 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேஸ்ட் என்றும், 38 எம்.பி.கள் தமிழகத்திற்கு எதை பெற்று தந்து இருக்கிறார்கள். அரசியல் தான் செய்கின்றனர்.மதிமுக பொது செயலாளர் வைகோ தனது இருப்பினை காட்டி கொள்ள முதல்வர் மீது குற்றம்சாட்டுகிறார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி உழவர் மகன் மட்டுமல்ல அவரே ஒரு விவசாயி தான் என்றும், முதல்வரிடம் போலித்தனம் கிடையாது, யதார்த்தமான சாமனிய முதல்வராக மக்கள் அவரை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

தமிழ், தமிழ் என்று பேசுபவர்கள் தமிழர் திருநாள் தைப்பொங்களுக்க வாரி வழங்கி இருக்கலாமே , அதிமுக ஆட்சி காலத்தில் தான் பொது மக்களுக்கு பொங்கல் பரிசு தொகையாக ரூ2500 வழங்கப்பட்டுள்ளது என்றும், மன்னர் காலத்தில் இருந்த குடிமரமாத்து என்ற பணியை மீண்டும் தமிழகத்தில் முதல்வர் கொண்டு வந்த காரணத்தினால் தான் மழைநீர் வீணகமால் நீர் நிலைகள் நிரம்பியுள்ளன.

முதல்வர் விவசாயியாக இருக்கின்ற காரணத்தினால் தான் அடிப்படைகளை புரிந்து கொண்டு செய்து வருகிறார். இதுவரை இது போன்று எந்த முதல்வர் செய்துள்ளார். இது அண்ணன் வைகோவிற்கு தெரியவில்லையா என்பது தான் எங்களுடைய கேள்வி என்றும், தமிழகத்தினை பொறுத்தவரை தேசிய கட்சிகள் அதிமுக, திமுகவுடன் தான் கூட்டணியில் இருக்கின்றன.

தமிழக தேர்தலை பொறுத்தவரை அந்த நிலையில் தான் எதிர்கொள்ள முடியும் என்றும், நாடாளுமன்ற தேர்தலிலன் போது தேசியகட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திப்போம் என்றும், ஆனால் மாநில தேர்தலை பொறுத்தவரை அதிமுக, திமுக தலைமையிலான கூட்டணியில் தான் தேசியகட்சிகள் இருக்கும் இது தான் நடைமுறை என்றார்

Views: - 0

0

0