தொடர் மழையினால் பாய்ந்தோடும் நொய்யல்…! கொட்டும் மழையிலும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆய்வு..!

7 August 2020, 12:49 pm
Minister sp velumani - inspection1 - updatenews360
Quick Share

கோவை : தொடர் மழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நொய்யல் ஆற்றின் வழித்தடங்களை, கொட்டும் மழையிலும் நினைந்தபடி அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆய்வு செய்தார்.

தமிழகம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, கோவை, நீலகிரி மழை பகுதிகளில் அதி கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்ததை போலவே, கடந்த சில நாட்களாக கோவையில் கனமழை பெய்து வருகிறது. அதுவும், சிறுவாணி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் பேய் மழை பெய்து வருகிறது.

இதனிடையே, இந்த மழை காலத்தை சரியாகப் பயன்படுத்தும் நோக்கில் உள்ளாட்சித் துறையின் சார்பில், ஏரிகள், குளங்கள் மற்றும் குட்டைகள் ஏற்கனவே தூர்வாரப்பட்டுள்ளன. இதனால், கோவை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, நொய்யல் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடி வருகிறது. செம்மேடு உக்குளம், சொட்டையாண்டி குளம், கங்க நாராயண சமுத்திர குளம், பேரூர் பெரிய குளம் வழியாக மழை நீர், கிராமங்களில் உள்ள நீர்நிலைகளுக்கு பாய்ந்தோடு வருகிறது.

எனவே, வெள்ளத்தினால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம், குளங்கள், வாய்க்கால்களை அதிகாரிகளை கண்காணிக்கவும், நீர் பாதைகளை அடைக்கும் புதர்களை அகற்றவும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆணையிட்டிருந்தார்.

அதன்படி, நேற்று போத்தனூரில் உள்ள நொய்யல் ஆற்றின் வழித்தடங்களை, கொட்டும் மழையிலும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆய்வு செய்தார். இதேபோல, குறிச்சிக்குளம் வாய்க்காலை பார்வையிட்ட அவர், கரையோரப் பகுதிகளை வலுப்படுத்தத் தேவையான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்தார்.

Views: - 35

0

0