அம்மா கிச்சனில் அமைச்சர் கொண்டாடிய விநாயகர் சதுர்த்தி!!

22 August 2020, 1:56 pm
RB Udayakumar Vinayagar- Updatenews360
Quick Share

மதுரை : கொரோனா நோயாளிகளுக்கு உணவு வழங்கி வரும் அம்மா கிச்சனில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடினார்.

இந்தியா முழுவதும் இன்று விநாயக சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக பொது இடங்களில் சிலைகள் வைக்க கூடாது கூட்டம் கூட கூடாது என்று அறிவுறுத்தப்பட்ட தன் பெயரில் தமிழகத்திலும் அந்த நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது

தமிழக அரசின் உத்தரவுக்கு ஏற்ப வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி கொண்டாட வேண்டும் என்று அறிவுறுத்தலின் பேரில் இன்று மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க கட்டிடத்தில் செயல்பட்டு வரும் அம்மா கிச்சனில் அமைச்சர் ஆர்பி உதயகுமார் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினார்.

கொரோனா நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மதுரை மாவட்டம் முழுவதும் இருக்கக்கூடிய மையங்களில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக உணவு வழங்கப்பட்டு வரக்கூடிய அந்த அம்மா கிச்சனில்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று காலை வருவாய்த்துறை அமைச்சர் மிக எளிமையான முறையில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினார்

போதிய சமூக இடைவெளியோடு அம்மா கிச்சனில் பணியாற்றக்கூடிய தன்னார்வலர்கள் மற்றும் கட்சிப் பிரமுகர்களும் நிர்வாகிகளும் கலந்துகொண்டு விநாயகர் சிலைக்கு பூஜை செய்து விநாயகருக்கு உரித்தான பழங்கள் முதலியவற்றை வைத்து பூஜை செய்தார்

Views: - 26

0

0