கேபிள் கட்டணம் கூடுதலாக வசூலித்தால் முடக்கப்படும் : தனியார் இ-சேவை மையங்களுக்கு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை!!

7 November 2020, 6:20 pm
Udumalai RadhaKrishnan- Updatenews360
Quick Share

அரசு கேபிள்டிவி நிறுவனத்திடம் உரிமம் பெற்ற தனியார் இசேவை மையங்கள் கூடுதல் கட்டணம் பெற்றால் உடனே முடக்கப்படும் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக மக்கள் பயன்பெறும் வகையில் அரசு கேபிள் டிவி ஆரம்பிக்கப்பட்டது. மேலும் அரசு கேபிள் டிவி நிறுவனத்திடம் சில தனியார் இ-சேவை மையங்களுக்கும் உரிமம் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் அரசு கேபிள் டிவி நிறவனத்திடம் உரிமம் பெற்ற சில தனியார் இ-சேவை மையங்கள் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக அரசுக்கு புகார் வந்தன. இந்த நிலையில், இது குறித்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது, அரசு கேபிள் டிவி நிறுவனத்திடம் இருந்து உரிமம் பெற்ற சில தனியார் இ-சேவை மையங்கள் பொதுமக்களிடம் அதிகமாக கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அரசு இ-சேவை மையங்களிலும், உரிமம் பெற்ற தனியார் இ-சேவை மையங்களில் நிர்ணயம் செய்ததை விட கூடுதல் கட்டணம் பெற்றால் உடனே உரிமம் ரத்து செய்து முடக்கப்படும் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

மேலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் கட்டணமில்லாத தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்றும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Views: - 25

0

0