மைனர் பெண்களுக்கு அடுத்தடுத்து பாலியல் தொல்லை : திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஊராட்சி அமைப்பாளர் கைது!!

11 September 2020, 11:41 am
thirupathur dmk arrest - updatenews360
Quick Share

திருப்பத்தூர் : மைனர் பெண்ணின் செல்போனுக்கு ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அனுப்பிய திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஊராட்சி அமைப்பாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மிட்டாளம் பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவரது மகன் அஜித். இவர் திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஊராட்சி அமைப்பாளராக இருந்து வருகிறார். ஏற்கனவே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் மைனர் பெண்ணை கடத்திய வழக்கில் போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அண்மையில் ஜாமீனில் வெளியே வந்த தி.மு.க. நிர்வாகி அஜித், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது பெண்ணின் செல்போனுக்கு ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை அனுப்பியுள்ளார். மேலும், தன்னுடைய புகைப்படத்துடன், அந்த சிறுமியின் புகைப்படத்தையும் இணைத்து சமூக வலைதளங்களில் பதவிறக்கம் செய்துள்ளார்.

இதனை தட்டிக் கேட்ட கிருஷ்ணமூர்த்தி என்பவரையும் தி.மு.க. நிர்வாகி அஜித் மிரட்டியுள்ளார். இதையடுத்து, கிருஷ்ணமூர்த்தி அளித்த புகாரின் பேரில், போஸ்கோ மற்றும் கொலை மிரட்டல் வழக்குகளில், அஜித்தை உமராபாத் போலீசார் மீண்டும் கைது செய்தனர்.

பின்னர், ஆம்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Views: - 0

0

0