“நவீன காலத்தின் சாணக்கியர் அமித் ஷா”..! ஒரே போடாய் போட்ட ஓபிஎஸ்..! பாஜக -அதிமுக கூட்டணி உறுதி..!

21 November 2020, 6:53 pm
Amit_Shah_OPS_UpdateNews360
Quick Share

அமித் ஷாவுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமித் ஷாவை, நவீன காலத்தின் சாணக்கியர் என வானளாவ புகழ்ந்ததோடு, அதிமுக மற்றும் பாஜக இடையேயான கூட்டணி தொடரும் என உறுதிபட தெரிவித்துள்ளார்.

அரசு மற்றும் கட்சி சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்கபதற்காக மத்திய உள்துறை அமித் ஷா இன்று சென்னையில் முகாமிட்டுள்ளார். முனந்தாஜி சென்னை வந்த அவரை ஏர்போர்ட்டில் வைத்து தமிழகத்தின் முதல்வர், துணை முதல்வர், இதர அமைச்சர்கள் மற்றும் பாஜக தலைவர்கள் வரவேற்றனர்.

மக்களுக்கான திட்டங்களை தொடங்கி வைத்த அமித் ஷா :

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திருவள்ளூரில் ரூ 380 கோடியில் அமைக்கப்பட்ட தேர்வாய் கண்டிகையில் நீர்த்தேக்கத்தை மக்களுக்கு அர்ப்பணித்தார். 

மேலும் ரூ 61,843 கோடி மதிப்பிலான சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2’ம் கட்ட திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 3 வழித்தடங்களில் 118.9 கி.மீ. தூரத்திற்கு சென்னை மெட்ரோ ரயிலின் 2’ம் கட்டம் செயல்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

கோவை – அவினாசி சாலையில் ரூ 1,620 கோடியிலான உயர்மட்ட சாலை திட்டத்தையும், கரூர் மாவட்டம் நஞ்சை புகலூரில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ 406 கோடி மதிப்பில் கதவணை திட்டத்தையும் அமித் ஷா தொடங்கி வைத்தார்.

மேலும் ரூ. 309 கோடி மதிப்பிலான சென்னை வர்த்தக மையத்தை விரிவுபடுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்ததோடு, நல்லூரில் ரூ 900 கோடி மதிப்பிலான இந்தியன் ஆயில் நிறுவனத்தின் முனையத்திற்கு அடிக்கல் நாட்டினார். 

இது தவிர ரூ 1,400 கோடி மதிப்பில் திருமுல்லைவாயிலில் அமையவுள்ள மசகு எண்ணெய் ஆலைக்கு அடிக்கல் நாட்டினார்.

இவையனைத்தும் சென்னையிலிருந்து வீடியோ கான்பெரன்ஸ் மூலம் நடந்தது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் மட்டுமல்லாது தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் உள்ளிட்ட அதிமுக மற்றும் பாஜக முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அதிமுக – பாஜக கூட்டணி :

  மத்திய அமைச்சர் அமித் தமிழகம் வந்த நிலையில், முன்னதாக கூட்டணி குறித்து முடிவெடுக்க சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பல அம்சங்கள் விவாதிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களிடம் முதல்வர் மற்றும் துணைமுதல்வர் கருத்துக்களைக் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது கூட்டணி வெளிப்படையாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

நவீன கால சாணக்கியர் அமித் ஷா :

அமித் ஷா, தேர்தலை சரியாக திட்டமிட்டு வெற்றி பெறுவதில் நிபுணத்துவம்  பெற்றவர் என்பது அனைவரும் அறிந்ததே. இதற்காக அவர் பாஜகவால் சாணக்கியர் எனவும் போற்றப்படுகிறார்.

இந்நிலையில் இன்று சென்னையில் நடந்த விழாவில் பேசிய தமிழகத்தின் துணை முதல்வர் ஓபிஎஸ், அமித் ஷாவை நவீன காலத்தின் சாணக்கியர் என வானளாவ புகழ்ந்துள்ளார். மேலும் இனிவரும் தேர்தல்களில் அதிமுக, பாஜக கூட்டணி தொடரும் என உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.

பாஜக, அதிமுக மட்டுமல்லாது பாமக மற்றும் தேமுதிக நிர்வாகிகளும் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளதால், கடந்த பாராளுமன்றத் தேர்தலைப் போல இந்த முறையும் அதே கூட்டணி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 34

0

0

1 thought on ““நவீன காலத்தின் சாணக்கியர் அமித் ஷா”..! ஒரே போடாய் போட்ட ஓபிஎஸ்..! பாஜக -அதிமுக கூட்டணி உறுதி..!

Comments are closed.