ஐடி பிடியில் சிக்கியது மோகன்லால் ஜுவல்லரி : பெட்டி பெட்டியாக ரொக்கம், தங்கம் பறிமுதல்..!!

12 November 2020, 1:47 pm
Income tax - updatenews360
Quick Share

சென்னை : சென்னையில் உள்ள பிரபல நகைக்கடையில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரொக்கம், தங்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை சவுக்கார்பேட்டையில் அமைந்துள்ள மோகன்லால் ஜுவல்லரியில் கடந்த 10ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஜுவல்லரி நிறுவனத்தின் உரிமையாளர் மோகன்லால் கபாரிக்கு சொந்தமான கீழ்ப்பாக்கத்தில் உள்ளவீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும், மோகன்லால் ஜுவல்லரியுடன் தொடர்பில் மும்பை நிறுவனங்களிலும் ரெய்டு நடத்தப்பட்டது.

இந்த சோதனையில், கணக்கில் காட்டப்படாத ரூ. 500 கோடி மற்றும் ரூ. 400 கோடி மதிப்பிலான 814 கிலோ தங்கம் உள்பட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 36

0

0