தோழியின் நம்பரை கேட்ட நண்பன் வெட்டிக்கொலை : நண்பர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி பரபரப்பு தீர்ப்பு!!

16 April 2021, 7:10 pm
Murder Tirupur -Updatenews360
Quick Share

திருப்பூர் : நண்பரின் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்த நண்பர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தேனி மாவட்டத்தை சேர்ந்த கண்ணன் மற்றும் அவருடைய நண்பர் தர்மா ஆகிய இருவரும் கோவையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர். இதில் தர்மாவுக்கு இளம் பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது .

இதனிடையே அப்பெண்ணின் தொடர்பு எண்ணை கேட்டு கண்ணன் என்பவர் தர்மாவிடம் தகராறு செய்துள்ளார் . இதனால் இருவருக்குமிடையே விரோதம் ஏற்பட்ட சூழ்நிலையில் கடந்த 2013ம் ஆண்டு அக்டோபர் மாதம் 28ஆம் தேதி கண்ணன், தர்மா ஆகிய இருவரும் மது அருந்துவதற்காக ஊத்துக்குளி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று உள்ளனர்.

அங்கு தர்மா மற்றும் கண்ணன் வந்த நிலையில் அவர்களோடு தர்மாவின் நண்பர் பாலமுருகன் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். பின்னர் மதுபோதையில் பாலமுருகன் மற்றும் தர்மா இருவரும் கண்ணனை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு தப்பி சென்றனர்.

இதுகுறித்த வழக்கில் ஊத்துக்குளி போலீசார் தர்மா மற்றும் பாலமுருகன் ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் இந்த வழக்கு திருப்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் பாலமுருகன் மற்றும் தர்மா ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Views: - 78

0

0