நிர்வாண கோலத்தில் இளம்பெண் கொலை? கண்ணை மறைத்த பிஞ்சுக் காதலால் அரங்கேறிய விபரீதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 October 2021, 6:06 pm
2k Kids Marriage Murder -Updatenews360
Quick Share

திருப்பூர் : காதல் திருமணம் செய்த ஓராண்டில் இளம் பெண் நிர்வாண கோலத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை சேர்ந்த கன்னையா – மணிமுத்து தம்பதியினர் திருப்பூர் போயம்பாளையம் பகுதியில் தனது நான்கு மகள்களுடன் வசித்து வருகின்றனர் .

இவர்களது 19 வயது மகளான வைஷ்ணவி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அதே நிறுவனத்தில் தேனி மாவட்டம் போடியநாயக்கனூர் பகுதியை சேர்ந்த அருண்குமார் (வயது 23) என்பவர் வேலை செய்து வந்த போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் இரண்டு பேரும் கடந்த ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணமாகி போயம்பாளையம் பகுதியில் உள்ள அருண் வீட்டில் இருவரும் தங்கி குடும்பம் நடத்தினர். ஆனால் திருமணத்திற்கு பின்பு தான் அருண்குமார் மீது கொலை கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் இருப்பது வைஷ்ணவிக்கு தெரியவந்தது.

இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதும், வைஷ்ணவி கோபித்து கொண்டு தாய் வீட்டிற்கு செல்வதும், திருந்துவதாக கூறி மீண்டும் அருண் வந்து அழைத்து செல்வதும் வாடிக்கையானது.

இந்த நிலையில் அருண் குமார் தனது மனைவியை தனியாக வீடு எடுத்து தங்க வைப்பதாக கூறி பண்ணாரியம்மன் நகரில் வீடு எடுத்து கடந்த 4 நாட்களுக்கு முன்னர் புதியதாக குடியேறியுள்ளனர்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அருண் குமார் மற்றும் வைஷ்ணவி இருவரும் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தனர். சிறிது நேரகம் கழித்து அருண் குமார் மட்டும் வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில் சாத்தப்பட்ட கதவு வெகுநேரமாக திறக்கப்படாமல் இருந்துள்ளது.

இதனால் சந்தேகமடைந்த பக்கத்து வீட்டினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வைஷ்ணவி நிர்வாண கோலத்தில் சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து உடனடியாக திருமுருகன்பூண்டி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து காவல்துறையினர் வைஷ்ணவியின் கழுத்தை நெறித்ததற்கான அடையாளம் உள்ளதால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலையா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணமாகி ஓராண்டு ஆகிவிட்ட சூழ்நிலையில் ஆர்டிஓ தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தலைமறைவாகியுள்ள வைஷ்ணவியின் கணவர் அருண்குமார் கொலை வழக்கு ஒன்றில் ஜாமினில் வெளியே உள்ள அவர் வீரபாண்டி காவல் நிலையத்தில் ஜாமீன் கையெழுத்திட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

வைஷ்ணவியை அவரது கணவர் அருண்குமார்தான் கொலை செய்திருப்பார் என அவரை கைது செய்ய வேண்டும் என வைஷ்ணவியின் குடும்பத்தார் வலியுறுத்தியுள்ளனர்.

Views: - 877

0

0