கஞ்சா வியாபார தகராறில் இரட்டை கொலை: மூன்றாவது குற்றவாளி கைது

Author: Udhayakumar Raman
27 June 2021, 6:36 pm
Quick Share

கன்னியாகுமரி: முருகன்குன்றம் பகுதியில் அரங்கேறிய இரட்டை கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மூன்றாவது குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

குமரி அருகே முருகன் குன்றம் பகுதியில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு கஞ்சா கொடுக்கல் வாங்கல் தகராறில் 2 வாலிபர்கள் கொலை செய்யப்பட்டனர்.இது சம்மந்தமாக ஏற்கனவே நேற்று சனிக்கிழமை இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அகஸ்தீஸ்வரம் பகுதியை சேர்ந்த பச்சைமால் என்பவரது மகன் ராஜேஷ் என்ற பில்லா ராஜேஷ் என்பவரை தனிப்படை போலீசார் தேடிவந்த நிலையில், அவரையும் இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடித்து கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்த, தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் வெகுவாக பாராட்டியுள்ளார்.

Views: - 326

0

0