நாமக்கல் டூ சென்னை காதல்: நீட் தேர்வு எழுதிவிட்டு மாயமான மாணவி காதலனுடன் போலீசில் தஞ்சம்…!!

Author: Aarthi Sivakumar
19 September 2021, 5:45 pm
Quick Share

நாமக்கல்: நாமகிரிப்பேட்டை அருகே நீட் தேர்வு எழுதிய மாணவி மாயமான வழக்கில் புதிய திருப்பமாக தனது பேஸ்புக் காதலனை திருமணம் செய்து கொண்டு தேனி மாவட்ட போலீசில் தஞ்சமடைந்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்த சின்ன அரியாக்கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் செந்தில்பாண்டியன். டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக உள்ளார். இவரது மகள் சுவேதா (19).

ஸ்வேதா ராசிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு கடந்த ஆண்டு நாமக்கல்லில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் நீட் பயிற்சி பெற்றுள்ளார். கடந்தவாரம் திருச்செங்கோட்டில் உள்ள மையத்தில் அவர் நீட் தேர்வு எழுதிவிட்டு வந்தது முதலே சோகமாக காணப்பட்டுள்ளார்.

ஸ்வேதாவை அவரது பெற்றோர்கள் சமாதானம் செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை 11 மணி அளவில் கழிவறைக்கு செல்வதாக கூறி சென்ற ஸ்வேதா, மீண்டும் வீடு திரும்பவில்லை. சந்தேகமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் இரவு வரை ஸ்வேதா கிடைக்கவில்லை.

இதுகுறித்து அவர்களின் பெற்றோர்கள் நேற்று இரவு நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பெயரில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தேனி மாவட்டம் உத்தமபாளையம் காவல் நிலையத்தில் மாணவி சரணடைந்ததாக வந்த தகலையடுத்து நாமக்கல் போலீசார் அங்கு சென்றுள்ளனர்.

விசாரணையில் காதல் விவகாரம் காரணமாக மாணவி வீட்டிலிருந்து மாயமாகியதாகவும், அவரும் அவரது காதலனும் திருமணம் செய்து கொண்டு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்ததும் தெரியவந்தது.

Views: - 160

0

0