நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் : கனிமொழி எம்.பி வலியுறுத்தல்!!

24 August 2020, 12:32 pm
Kanimozhi MP - Updatenews360
Quick Share

தூத்துக்குடி : கொரோனா காரணமாக நீட் தேர்வை இந்தாண்டு ரத்து செய்துவிட்டு பின்னர் முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என மக்களவை உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி எம்பி கனிமொழி, தேசிய கல்விக் கொள்கையில் மாற்றங்கள் மேற்கொள்வதற்காக திமுக ஒரு குழு அமைத்து பல்வேறு கருத்துக்களை கூறியது. அந்த கருத்துக்கள் எதுவும் இதுவரை ஏற்கபடவில்லை, பல்வேறு மாநிலங்கள் இந்த கொள்கையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து கூறிய கருத்துக்கள் எதுவும் ஏற்கப்படவில்லை என அவர் குற்றம் சாட்டினார்.

34 ஆண்டுகளுக்கு பிறகு கொண்டுவரப்பட்டுள்ள தேசிய கல்விக் கொள்கையில் சொல்லக்கூடிய கருத்துக்களை ஏற்றுக் கொண்டால் அது வரவேற்கத்தக்கதாக இருக்கும் என்றார்.

சமூகநீதிக்கு எதிரானதாகவும், மொழி திணிப்பிற்ககாகவும், மாநிலங்களிடையே உரிமையை பறிக்கும் வகையில் புதிய தேசிய கல்வி கொள்கை அமைந்துள்ளது என கூறிய அவர், இந்த கொரோனா தொற்று பரவிவரும் சூழலில் நீட் தேர்வை தற்காலிகமாக விலக்கி வைக்கப்பட வேண்டும். பின்னர் அது நிரந்தரமாக விலக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.