“ட்ரியோ ட்ரியோ டுர்ர்ர்“… தாலி கட்டியதும் புதுமணத்தம்பதியின் மாட்டு வண்டி பயணம்!!

28 November 2020, 2:12 pm
Couple Cart - Updatenews360
Quick Share

கோவை : விவசாயி ஒருவர் தனது திருமணத்தை முடித்து விட்டு தனது மனைவியுடன் மாட்டு வண்டியில் பயணம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோவை அரிசிபாளையம் பகுதியை சேர்ந்த ஸ்ரீராம்-சுமித்ரா ஆகியோருக்கு இன்று மதுக்கரை பகுதியில் உள்ள தனியார் அரங்கில் திருமணம் நடைபெற்றது.

மணமக்கள் குடும்பத்தினர் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டவர்கள் என்பதால் அவர்களது பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக மாட்டுவண்டியில் மறுவீடு செல்ல முடிவு செய்தனர்.

இதனையடுத்து புதுமணத் தம்பதியினர் அரசிப்பாளையம் கிராமத்தில் உள்ள மணமகன் வீட்டுக்கு மதுக்கரை திருமண மண்டபத்தில் இருந்து மாட்டு வண்டியில் சென்றனர்.இது வழி நெடுவிலும் உள்ள பொதுமக்களை கவர்ந்தது.

Views: - 0

0

0