கோவையில் திருமண நிகழ்ச்சிகளுக்கு புதிய கட்டுப்பாடு : மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
30 August 2021, 7:46 pm
Cbe Collector - Updatenews360
Quick Share

கோவை : கோவையில் திருமண நிகழ்ச்சிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: மாவட்டத்தில் உள்ள அனைத்து திருமண மண்டபங்களிலும் நடைபெற உள்ள திருமண நிகழ்ச்சிகள் மற்றும் இதர நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை ஒரு வாரத்திற்கு முன் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்களிடம் தெரிவித்து அனுமதி பெற வேண்டும் என அனைத்து திருமண மண்டப உரிமையாளர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து நிலையான இயக்க நடைமுறைகளையும் பின்பற்றி 50 நபர்களுக்கு மிகாமல் திருமண நிகழ்ச்சி இதர நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு குழுக்கள் மூலம் விதிமுறைகளை மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கொரோனா தொற்று தடுப்பு பணிக்காக மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்திட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர் சமீரன்.ஐ.ஏ.எஸ். தெரிவித்துள்ளார்

Views: - 216

0

0