புதுமணப் பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொடூர கொலை.!!
30 August 2020, 1:40 pmதிருச்சி : சமயபுரம் அருகே இயற்கை உபாதை கழிக்க சென்ற புதுமணப்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே பிச்சாண்டார்கோயில் ஊராட்சியில் உள்ளது வாழவந்திபுரம். இந்த பகுதியில் வசிப்பவர் ஜான்ரவி, குழந்தை தெரசா தம்பதியின் மகன் அருள்ராஜ் (வயது 28). 9 ம் வகுப்பு வரை படித்துள்ள இவர் ஆந்திரா மாநிலத்தில் உள்ள கோயா பைப் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
அருள்ராஜீவுக்கும் லால்குடி மேலமணக்கால் சூசையபுரத்தைத் சேர்ந்த திரவியராஜ் பிரகாசி தம்பதியின் மகள் எம்காம் பட்டதாரியான கிருஷ்டி ஹெலன்ராணி (வயது 26) ஆகியோருக்கு கடந்த 10-07-2020 அன்று இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.
புதுமணத் தம்பதி இருவரும் வாளவந்தபுரம் பகுதியில் உள்ள அருள்ராஜ் வீட்டில் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கும் நல்ல புரிதல் இல்லையென கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் இயற்கை உபாதையினை கழிக்க வீட்டிலிருந்து அருகில் உள்ள கொள்ளிடம் ஆற்றுக்கு தனியாக சென்ற பெண் வீடு திரும்பவில்லை.
இதனால் கணவர் அருள்ராஜ் அவரது உறவினர்கள் கொள்ளிடம் ஆற்றிற்கு சென்று பார்த்த போது, ஆற்றில் தேங்கியுள்ள குட்டை நீரின் கரையோரத்தில் உடலில் எவ்வித துணியுமின்றி சடலமாக கிடந்துள்ளார். அவர் அணிந்துயிருந்த நகைகள் மாயமாகி உள்ளது. தேடிச் சென்றவர்கள் சடலத்தை பார்த்து கொள்ளிடம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து வந்த சமயபுரம் கொள்ளிடம் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து லால்குடி டிஎஸ்பி தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு,கைரேகை நிபுணர்களும், ஸ்பார்க் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் ஆற்றிலியே சிறிது நேரம் சுற்றிச்சுற்றி வந்த்து யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.மேலும் சம்பவ இடத்திற்கு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் நேரில் ஆய்வு செய்து தனிப்படை அமைத்து விசாரணையை முடுக்கி விட்டனர்.