அடுத்த 24 மணிநேரத்திற்கு தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

20 January 2021, 3:15 pm
Rain - Updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது :- இலங்கைக்கு கிழக்கே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால், அடுத்த 24 மணிநேரத்திற்கு தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும்.

வருகின்ற 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும். சென்னை புறநகரில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் இருக்கும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0