அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை

25 November 2020, 11:20 pm
Quick Share

அடுத்த 3 மணி நேரத்தில் அரியலூர், கடலூர் உள்பட 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நிவர் புயல் இன்னும் சில நிமிடங்களில் கரையை கடக்கும் நிலையை தொடங்கும். இதனால் அடுத்த 3 மணி நேரத்தில் அரியலூர், கடலூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், நாகை, மயிலாடுதுறை ஆகிய 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் புதுச்சேரிக்கு அருகே 3 மணி நேரத்தில் புயலின் மையப் பகுதி கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிவர் புயல் கரையை கடக்கும் இடங்களில் 120 கி.மீ முதல் 140 கி.மீ வேகத்தில் காற்று வீசத் தொடங்கியது.

Views: - 13

0

0