தமிழகத்தை மிரட்டும் நிவர் புயல் 300 கிமீ தொலைவில் மையம்! கடும் சூறாவளியாக மாறி கரையை கடக்க வாய்ப்பு!!

25 November 2020, 9:01 am
Nivar - Updatenews360
Quick Share

அதிதீவிரமான நிவர் புயல் புதுச்சேரியில் இருந்து 300 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ள நிலையில் இன்று இரவு சூறாவளி புயலாக மாறி கரையை கடக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிவர் புயல் தீவிர புயலாக மாறி வலுப்பெற்றதுள்ளது. தென் மேற்கு வங்க கடல் பகுதியில் இருந்து புதுச்சேரிக்க கிழக்கு தென்கிழக்கு திசையே 300 கிலோ மீட்டர் தொலைவிலும் சென்னையில் இருந்து 350 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

Cyclone Nivar: நிவர் புயல் 320 கிமீ தொலைவில் உள்ளது.. கடும் சூறாவளி புயலாக மாறி இன்று இரவு கரையை கடக்க வாய்ப்பு

மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டு இருப்பதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார், மேலும் தொடர்ந்து தீவிர புயலாக வட மேற்கு திசையில் இருந்து காரைக்கால் மற்றும் மாமல்லபுரத்திற்கு இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்று கரையை கடக்கும் என கூறியுள்ளார்.

தமிழகம் மற்றும் புதுவையில் வரும் 27ஆம் தேதி வரை மழை தொடரும் என தெரிவித்த அவர், அடுத்த 24 மணி நேரத்திற்கு புதுவை கடலூர் மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி. திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிக மழை பெய்யும் என்றும், பலத்த காற்று காரணமாக மயிலாடுதுறை, காரைக்கால், கடலூர், புதுவை, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மணிக்கு 120 முதல் 145 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவித்துள்ளார்.

Views: - 22

0

0