மக்களை சந்திக்க பயமில்லை, திமுகவை போல் ஓடி ஒளிய மாட்டோம் : அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு!!

19 October 2020, 3:12 pm
Sellur raju - Updatenews360
Quick Share

மதுரை : மக்களை சந்திக்க அதிமுகவிற்கு பயமில்லை, திமுகவை போல் ஓடி ஒளிய மாட்டோம் என அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.

மதுரையில் கூட்டுறவுத் துறை சார்பாக 5 அம்மா நகரும் நியாய விலை கடை வாகனத்தை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்,

அதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேசுகையில், எதிரிகளால் இந்த அரசைப் பற்றி குற்றம் கூற முடியவில்லை அதனால் அவதூறு பரப்பி வருகிறார்கள். ஆதாரமில்லாத குற்றச்சாட்டை கட்டவிழ்த்து விடுகிறார்கள். திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியாவிற்கே முன் மாதிரியாக தமிழகம் செயல்பட்டு வருகிறது என கூறினார்.

தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு , தமிழக மக்கள் எதையும் ஆராய்ந்து பார்க்கக் கூடியவர்கள் அது நாடே அறியும்,மக்கள் முன்பு தைரியமாக ஓட்டு கேட்கிறோமே இதுவே பெரிய சாதனை,கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய அரசுதான் அதிமுக அரசு,மற்ற கட்சிகள் அனைத்தும் கோட்டையில் இருந்து மக்களை பார்த்தார்கள்,ஆனால் அதிமுக அரசு மக்களிடம் இருந்து கோட்டை பார்த்தது அதுதான் அதிமுக அரசு.

நாளைக்கு மக்களை சந்திக்க எங்களுக்கு பயமில்லை மக்களின் வாக்குறுதியை நிறைவேற்ற நாங்கள் இருக்கிறோம். திமுக ஆட்சியில் நடந்த அட்டூழியங்களை மக்கள் மறந்து விடுவார்கள் என்று நினைக்கிறீர்களா? இந்த ஆட்சி ஜனநாயக காக்கப்பட்டுள்ளது.

10 ஆண்டுகளில் யாருக்காவது எந்த இடையூறாவது செய்தோமா? திமுக காலத்தில் ஆறு மாதத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் செய்யப்பட்டனர். எதிர்க்கட்சித் தலைவரின் தொகுதிக்கு அவர் கேட்காமலே நடமாடும் 20 நியாய விலை கடை வழங்கி இருக்கிறோம்.

திமுகவை போல் நாங்கள் ஓடி ஒளிந்து கொள்ளவில்லை, எனக்கு கொரோனா வந்த பிறகும்கூட குணமாகி மீண்டும் வந்து மக்கள் பணியில் ஈடுபட்டேன். திமுக ஆட்சியில் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவில்லை எங்களுடைய ஆட்சியில்தான் வழங்கப்படுகிறது.

கூட்டுறவு துறை ஊழியர்களுக்கு எங்களுடைய ஆட்சியில் இரண்டு முறை ஊதிய உயர்வு வழங்கி இருக்கிறோம். இந்திய வரலாற்றிலேயே கூட்டுறவுத்துறையில் தமிழ்நாட்டில் விருது வாங்கி இருக்கிறது.

மிட்டா மிராசு பிள்ளைகளுக்கு இணையாக ஏழைக் குழந்தைகளின் பிள்ளைகள் மடிக்கணினி வைத்துள்ளார்கள். தங்கத்தை தோண்டி எடுக்கும் நாட்டில் கூட தங்கத்தை இலவசமாகத் தருவதில்லை, 6999 கிலோ தங்கம் இலவசமாக தங்கத்துக்கு தாலி திட்டத்தின் கீழ் கொடுத்துள்ளோம்.

தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணாவின் கனவை நிறைவேற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, திமுக காஆட்சிக்கு வர துடிக்கிறதே திமுக ஆட்சிக்கு வந்த பாலாறும் தேனாறும் ஓடுமா?,மக்களைத் உங்களை ஏமாற்றுகிறார்கள், உங்களை மயக்குகிறார்கள் நம்ப வேண்டாம் என்றார்..

Views: - 23

0

0