வால்பாறைக்குள் தினமும் 400 வாகனம் மட்டுமே அனுமதி: இ-பாஸ் கட்டாயம்…!!!

By: Aarthi
8 October 2020, 4:48 pm
covai collecotr - updatenews360
Quick Share

ஆனைமலை: வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்றும் நாள் ஒன்றுக்கு 400 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறைக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் செல்வதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, வால்பாறைக்கு சுற்றுலா செல்லும் வாகனங்கள் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வால்பாறைக்கு செல்ல ஆர்வம் காட்டி வருவதால், தினமும் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது.

இதனால் ஏற்படும் தொற்று அதிகரிப்பை தடுக்கும் வகையில் வால்பாறைக்கு செல்ல இ-பாஸ் கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் ராஜாமணி அறிவித்துள்ளார். மேலும் நேற்று ஆழியார் வனத்துறை சோதனைச் சாவடியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, கொரோனா தொற்று பரவாமல் தடுக்க வால்பாறைக்கு சுற்றுலா வரும் வெளி மாவட்ட பயணிகள் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும். வால்பாறைக்குள் நாள் ஒன்றுக்கு 400 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Views: - 45

0

0