அரசு மருத்துவமனையில் காதலருடன் நர்ஸ் கசமுசா..! அறையை வெளிப்புறமாக பூட்டிய பொதுமக்கள்..!

3 November 2020, 9:02 pm
Kulasegaram_Govt_Hospital_UpdateNews360
Quick Share

கொரோனா நோய்த்தொற்றுக்களில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வரும் சமயத்தில், அரசு மருத்துவமனைகளில் உள் நோயாளிகள் இல்லாத நிலையில், வெளி நோயாளிகளின் வருகையும் வெகுவாக குறைந்து விட்டது.

இதனால் அங்கு பணியில் உள்ளவர்களுக்கு பெரிதாக வேலைப் பளு இல்லாமல் பொழுது போக்கி வருவதாக த நிலையில் ஒரு அரசு மருத்துவமனையில் நர்ஸ் ஒருவர் தனது காதலருடன் மருத்துவர் அறையில் கசமுசாவில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரியின் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், ஆரல்வாய்மொழியில் 108 ஆம்புலன்ஸ் சேவையில் நர்ஸாக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது ஆம்புலன்சில் டிரைவராக பணிபுரிந்து வந்த பாபு எனும் நபரைக் காதலித்து வந்துள்ளார்.

ஒரே ஆம்புலன்சில் இருவரும் பணிபுரிந்து வந்ததால் நெருக்கம் மிக அதிகமாகியுள்ளது. இந்நிலையில் நர்ஸாக பணிபுரிந்த பெண்ணுக்கு பணியிட மாறுதல் கொடுக்கப்பட்டு குலசேகரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

பணியிட மாறுதலால் இருவரும் பிரிந்தாலும் தினமும் மொபைல் போனில் மணிக்கணக்கில் பேசி தங்கள் காதலை வளர்த்து வந்தனர். இதற்கிடையே காதலனை பார்க்க ஆசைப்பட்ட அந்த நர்ஸ், தனது காதலனை குலசேகரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துள்ளார்.

காதலனும் ஆசை ஆசையாக காதலிக்கு பிரியாணியும் மல்லிகைப் பூவும் வாங்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது மதியவேளை என்பதால் மருத்துவமனையில் மருத்துவரும் இல்லை, நோயாளிகளின் கூட்டமும் இல்லை.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள நினைத்த காதலர்கள் மருத்துவரின் அறைக்குள் சென்று கசமுசாவில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். எதிர்பாராதவிதமாக இதைப் பார்த்த அந்தப் பகுதி மக்கள், உடனடியாக கதவை வெளிப்புறம் பூட்டிவிட்டு, மருத்துவமனையில் திருடன் நுழைந்துவிட்டதாக குலசேகரம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து விரைந்து வந்த போலீசார், கதவைத் திறந்ததும் உள்ளே இருந்தது காதலர்கள் என அறிந்து இருவரையும் எச்சரித்து அனுப்பியதோடு, நர்ஸ் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 43

0

0

1 thought on “அரசு மருத்துவமனையில் காதலருடன் நர்ஸ் கசமுசா..! அறையை வெளிப்புறமாக பூட்டிய பொதுமக்கள்..!

Comments are closed.