பிரதமரின் கோவை பொதுக்கூட்டத்தில் ஒன்றரை லட்சம் பேர் பங்கேற்கின்றனர் : பாஜக நிர்வாகி தகவல்!!

23 February 2021, 1:00 pm
Cbe Modi - Updatenews360
Quick Share

கோவை : கோவையில் பிரதமர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்தில் சுமார் 1.5 லட்சம் பேர் பங்கேற்க உள்ளதாக கோவை மாவட்ட பா.ஜ.க தலைவர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி வரும் 25ம் தேதி தனி விமானம் மூலமாக கோவை வர உள்ளார். மேலும், கொடீசியா வளாகத்தில் நடைபெறும் கட்சி பொதுக்கூட்டத்திலும், அரசு விழாவிலும் பங்கேற்று உரையாற்றுகிறார். பிரதமர் கோவை வருவதை முன்னிட்டு முதலமைச்சர், துணை முதலமைச்சரும் கோவை வருகின்றனர்.

கொடிசியா மைதானத்தில்பொதுக்கூட்டத்தில் பிரதமர் உறையாற்றுவதற்காக மேடை அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், மினி காவல் கட்டுப்பாட்டு அறை, காவல் அதிகாரிகள் தங்கும் அறைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கொடிசியா மைதானத்தை சுற்றிலும் இன்று மட்டும் 3 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர். நிகழ்ச்சியன்று 7 ஆயிரம் போலீசார் கலந்து கொள்கின்றனர்.

இந்த நிலையில், நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை மாவட்ட தலைவர் நந்தகுமார் இன்று நேரில் பார்வையிட்டார். இதனை தொடர்ந்து செய்து அவரிடம் அவர் கூறியதாவது:

25ம் தேதி மாலை 3 மணியளவில் பிரதமர் கோவை வருகிறார். இதனை தொடர்ந்து கொடிசியா வளாகத்தில் அரசு விழாவில் கலந்து கொள்கிறார். பின்னர் பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். கட்சி நிர்வாகிகள் மட்டும் இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

சேலம், கோவை, ஈரோடு உட்பட 12 மாவட்டங்களை சேர்ந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்கள் என மொத்தம் 1.5 லட்சம் பேர் இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். என்றார்.

பிரதமரின் பொதுக்கூட்டத்தில், பா.ஜ.க தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி, உள்துறை இணை அமைச்சர் கிஷான் ரெட்டி, தமிழக துணை பொறுப்பாளர் சுகாதகர் ரெட்டி, மாநில தலைவர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

Views: - 11

0

0