மீண்டும் வெங்காயம் விலை உயர வாய்ப்பு!! மழை நீரால் வெங்காய சாகுபடி வீழ்ச்சி!!

19 November 2020, 3:47 pm
Onion- Updatenews360
Quick Share

கோவை : மழைநீரால் வெங்காய சாகுபடி வீழ்ச்சியடைந்துள்ளதால் விலை உயர வாய்ப்புள்ளது.

நல்ல லாபத்தை ஈட்டித் தரும் பயிர்களில் வெங்காயத்துக்கு முக்கிய இடம் உண்டு. சாம்பார் வெங்காயம் என்றழைக்கப்படும் சின்ன வெங்காயத்தை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடு சீனா. இரண்டாம் இடத்தில் இருக்கிறது, இந்தியா. உற்பத்தியில் சீனா முதல் இடத்திலிருந்தாலும் சர்வதேச சந்தையில் இந்திய வெங்காயத்துக்குத் தனி மரியாதை உண்டு. அதற்குக் காரணம், இந்திய வெங்காயத்தின் காரத்தன்மைதான்.வெகுமதி கொடுக்கும் வெங்காயம்.

இந்திய வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம், நம் மண்தான். இந்திய மண்ணைக் ‘கந்தகப் பூமி’ என்று சொல்வார்கள். அந்தளவுக்கு மண்ணில் ‘சல்ஃபர்’ அதிகமாக இருக்கிறது. அதனால்தான் இந்திய வெங்காயத்தின் தரம் சிறப்பாக இருக்கிறது. அதற்குக் கூடுதல் விலையும் கிடைக்கிறது.

வெங்காயத்தை ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யலாம் என்றாலும், விவசாயிகள் ஓரிரு பருவத்தில் ஒட்டுமொத்தமாக விளைவித்து விடுகிறார்கள். இதனால், விலை கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. நமது வெங்காயம், அதிகளவில் ஏற்றுமதியாகிறது. அதனால், பல நேரங்களில் சந்தையில் வெங்காயம் பற்றாக்குறை ஏற்படுகிறது.

இதே போல தற்போது கோவையை அடுத்த தொண்டமுத்தூர் பகுதியில் விவசாயிகள் அதிகளவில் வெங்காயம் சாகுபடி செய்து வருகின்றனர்.தற்போது பெய்து வந்த கனமழையால் பதப்படுத்தப்பட்ட வெங்காயம் மற்றும் சாகுபடி செய்யப்பட்ட நிலத்தில் அதிக அளவில் நீர் தேங்கி நிற்பதால் வெங்காயம் அழுகும் நிலைக்கு ஏற்பட்டுள்ளது.

தற்போது சந்தைகளில் கிலோ 100ரூபாய்க்கு மேல் விற்பனையாகும் சின்ன வெங்காயத்தின் விலை இரண்டு மடங்காக விலை போக வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.இந்த மழையினால் விலை நிலங்களில் மழை நீர் தேங்கி கிடப்பதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

Views: - 0

0

0