ஊராட்சி மன்ற தலைவர் பதவி ரூ.14 லட்சத்துக்கு ஏலம்? வட்டாட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 September 2021, 3:50 pm
Villupuram Auction -Updatenews360
Quick Share

விழுப்புரம் : ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏலம் விடப்படுவதாக கூறி மற்றொரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்தனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகாவிற்குட்பட்ட துத்திப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் ஆதிதிராவிடர் உட்பிரிவு கொண்ட அருந்ததியருக்கு ஒதுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் பதவியை ரூ.14 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து துத்திப்பட்டு மதுர பொண்ணங்குப்பம் பகுதி மக்கள் வட்டாட்சியரை முற்றுகையிட்டு தேர்தல் புறக்கணிக்கப்படுவதாக அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதிக வாக்குகளைக் கொண்ட துத்திப்பட்டு கிராமத்தினர் ஒன்றிணைந்து ஒருவரை ஏலம் விட்டு தேர்தலில் நிறுத்துவதால் குறைவான வாக்குகளைக் கொண்ட பொண்ணங்குப்பம் பஞ்சாயத்தை சார்ந்தவர்களுக்கு தலைவர் வாய்ப்பு இழக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

பொண்ணங்குப்பம் பகுதி மக்களுக்கென தனி ஊராட்சி அந்தஸ்து வேண்டும் என பலமுறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காததால் தொடர்ந்து மூன்று முறை இதேபோல் ஏலம் விடப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர். இதையடுத்து வட்டாச்சியருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Views: - 131

0

0