4 மாதங்களுக்கு பிறகு மெரினாவில் கால் பதித்த மக்கள் : முதல் நாளே நடு நடுங்க வைத்த சோக சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 August 2021, 6:14 pm
Marina Beach - Updatenews360
Quick Share

சென்னை : மெரினா கடற்கரை செல்வதற்கு அனுமதி கொடுக்கப்பட்ட முதல் நாளே கடலில் சிக்கி 3 மாணவர்கள் மாயமாகியுள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதிலும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது.

இந்நிலையில், தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று குறைய தொடங்கியுள்ளதையடுத்து தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்த நிடிலையில் இன்று முதல் கடற்கரைகளில் பொதுமக்கள் அனுமதிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி 4 மாதங்களுக்கு பிறகு மெரினா கடற்கரையில் இன்று மணல் பரப்பில் தங்கள் கால்களை மக்கள் பதித்தனர். ரம்மியமான இடம் என்பதால் கூட்டம் களைகட்டியது. கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் பொதுமக்கள் அனைவரும் பல நாட்களுக்கு பின் கடற்கரைக்கு செல்லும் ஆர்வத்தில் உற்சாகமாக கடற்கரைகளுக்கு சென்று வருகின்றனர். சானிடைசர் மற்றும் மாஸ்க் அணிவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

இந்ம நிலையில் இன்று மெரினா கடற்கரையில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற சென்னை வேளச்சேரியை சேர்ந்த 3 மாணவர்கள் அலையில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். கடற்கரைக்கு செல்வதற்கு அனுமதி கொடுத்த முதல் நாளே 3 பேர் கடல் அலையில் சிக்கி காணாமல் போயுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காணாமல் போனவர்களை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் இறங்கியுள்ளனர்.

Views: - 339

0

0