மத, அரசியல் கூட்டங்களுக்கு அனுமதி ரத்து : தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!!

12 November 2020, 10:06 am
Polictics - Updatenews360
Quick Share

நவம்பர் 16-ஆம் தேதி முதல் 100 பேருக்கு மிகாமல் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்ட அரசியல் கூட்டங்களுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழகத்தில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.

மாண்புமிகு அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் விளைவாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது.

தமிழக அரசின் சிற்பபான செயல்பட்டாலும், மக்கள் ஒத்துழைப்பாலும் நோய் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை தடுக்க மத்திய அரசு காட்டிய வழிமுறைகள் படி தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. தற்போது பண்டிகை காலம் என்பதால் பொதுமக்கள் பல்வேறு பொருட்கள் வாங்க கடை வீதிகள் மற்றும் பேருந்து நிலையங்களில் அதிகமாக கூடுகின்றனர்.

அப்படி மக்கள் கூடும் போது, முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்றவற்றில் கவனம் செலுத்தாது இருப்பது தமிழக அரசின் கவனத்திற்கு தெரிய வருகிறது. இந்த சூழ்நிலையில் கொரோனா நோய் தொற்று தடுப்பு பணிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் ஏறப்ட்டுள்ளது.

சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி சார்ந்த விழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் தொடர்பான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 100 நபர்களுக்கு மிகாமல் பங்கேற்கும் வகையில் 16.11.2020 முதல் நடத்த அனுமதிக்கப்பட்ட உத்தரவு தற்போது ரத்து செய்யப்படுகிறது. அவற்றிக்கான தடை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரையில் தொடர உத்தரவிடப்படுகிறது என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Views: - 30

0

0